வாரிசு பாடத்தை பாராட்ட ஒரு கோடி வாங்குனேன்னு சொன்னாங்களே… அந்த டுபாக்கூருங்களை யாராச்சும் பாத்தீங்களா.? பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

varisu
varisu

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா, பிரபு, குஷ்பூ, எஸ் ஜே சூர்யா, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடக்கூடிய படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் கதையை கடந்த 20 ஆண்டுகளாக கேட்டதே இல்லை என்று நடிகர் விஜயை கூறியிருக்கிறாராம்.

ஏற்கனவே ட்ரைலரை பார்த்து நொந்து போய் இருந்த ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் கதையை இதுவரைக்கும் நான் கேட்டதே இல்லை என்று கூறி ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் சற்று அதிகரித்து உள்ளது. இந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்ததா இல்லையா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் பாதியில் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் இரண்டாவது பாதியில் அதை சரி செய்து விடுவார்கள் என்று எண்ணினார்களாம் ஆனால் இரண்டாவது பாதியில் தான் அதிகமாக இயக்குனர் வம்சி சொதப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல youtube விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் வாரிசு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்க வேண்டும் என்று விஜய் அவர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அந்த பொய்யான தகவலை கலாய்க்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது வாரிசு படத்தை பாராட்ட ஒரு கோடி ரூபாய் வாங்கினேன்னு என்று சொன்னாங்களே.. அந்த டுபாக்கூருங்களை யாராச்சும் பார்த்தீர்களா? என்று கலாய்த்து ஒரு மீம்சை போட்டு உள்ளார். இந்த மீம்ஸ் விஜய் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.