நீ ரஜினி ரசிகனாக இருந்துட்டு போ.. ஆனா இது என்னுடைய படம் இயக்குனரையே அலறவிட்ட விஜயகாந்த்..!

vijayakanth
vijayakanth

80 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருக்கு இணையாக விஜயகாந்த் ஒரு பக்கம் கிராமத்திய படங்களில் நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரஜினிக்கு நிகராக பேசப்பட்டார்.

இதனால் விஜயகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகின ஒரு கட்டத்தில் ரஜினியை ஓவர்டேக் செய்து விஜயகாந்த் படங்கள் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த சமயத்தில் விஜயகாந்த் கண்ணுபட போகுதய்யா படத்தின் இயக்குனர் பாரதி கணேஷிடம் சண்டையிட்டு உள்ளார் அது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.

1999 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் கண்ணுபட போகுதய்யா இந்த படத்தில் விஜயகாந்த் உடன் கைகோர்த்து சிம்ரன், சிவக்குமார், கரண், ஆனந்தராஜ், ராதாரவி, லட்சுமி, பொன்னம்பலம், சார்லி, ஜெய் கணேஷ், லாவண்யா, சக்தி குமார் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் கண்ணுபட போகுதய்யா படத்தின் இயக்குனர் பாரதி கணேஷன் இந்த படத்திற்காக நடனம், நகைச்சுவை எல்லாம் பண்ண சொல்லி இருந்தார்.

ஒரு சமயம் விஜயகாந்திடம் சார் ரஜினியை பாருங்க குழந்தைத்தனமான நடிப்பு ஹியுமரெல்லாம் வைத்து எப்படி நடிக்கிறார் பாருங்க அந்த மாதிரி நடிப்புதான் எனக்கு வேண்டும் என சொல்லி உள்ளார் உடனே போகமடைந்த விஜயகாந்த் ரஜினி ரஜினின்னு வராத என சொல்ல இயக்குனர் சார் நான் ரஜினி ரசிகனாக சொன்னேன்.

என கூறினார் உடனே இன்னும் கோபமான விஜயகாந்த் இது என்னுடைய படம் என சொல்லி கடுப்பேற்றி விட்டாராம். பக்கத்தில் இருந்த டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி அப்படியே நின்னுட்டாராம் பின் விஜயகாந்தை சமாதானப்படுத்தி  படத்தில் நடிக்க வைத்தாராம். படம் வெளிவந்து ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் ஓடியது.