90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகைகள் தற்பொழுது தனக்கென ஒரு புதிய ரூட்டை அமைத்து தற்போது பயணித்து வருகின்றனர். அந்த வகையில் நமது லிஸ்டில் யார் யார் உள்ளார் என்று தற்போது பார்ப்போம். நடிகை சிம்ரன் ,மும்தாஜ், கஸ்தூரி, ராசி மந்திரா, ரோஜா நடிகைகள் தற்போது என்ன செய்து வருகிறார்கள் என்று பார்க்கலாம்.
1. சிம்ரன் அவர்கள் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றை நிறுவி தற்போது அதில் கல்லா கட்டி வருகிறார் இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ரோஜா அவர்கள் தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தற்போது பிரபலமடைந்து வருகிறார் மேலும் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
3. கஸ்தூரி அவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் மீண்டும் தலைகாட்டி தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். மேலும் சர்ச்சையான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக எதிர் குரல் கொடுக்கிறார். தற்பொழுது தன்னை பிஸியாகவே வைத்து வருகிறார் கஸ்தூரி
4. ராசி மந்திரா ஆரம்பகாலத்தில் தனது கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார் திருமணம் ஆனதற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் ஈடுபடாமல் தன்னை மறைத்து வாழ்ந்து வருகிறார் ராசி மந்திரா.
5. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஆரம்பத்திலேயே இருந்து இப்பொழுது வரையிலும் வலம் வந்தவர் நடிகை மும்தாஜ் இவர் கடைசியாக பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் மக்களை கவர்ந்தார்.
இத்தகைய நடிகைகள் ஆரம்பத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.