70 மற்றும் 80களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்தவர் நடிகர் சரத்பாபு. இவர் 70களில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர வேதங்களிலும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் சரத்பாபுவும் ரஜினியும் இணைந்து நடித்தாலே படம் ஹிட் தான் என்ற அளவிற்கு இவர்களுடைய கூட்டணி அமைந்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் ரஜினியுடன் இணையும்போது ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் சரத்பாபுவிற்கு வழங்கப்பட்டது. இப்படி சரத்பாபு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான பின்னர் தற்போது குணச்சித்திர வேதங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அவ்வபோது சினிமாவில் தலைகாட்டி வரும் நடிகர் சரத் பாபு தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் சரத்பாபு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சென்னையில் அதிகமாக பிரபாவுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்திருக்கிறது.
அதை அனைத்தையும் தன்னை ஏமாற்றி பிடுங்கி விட்டார் சரத்பாபு என்று ரமா பிரபா குற்றஜாட்டு வைத்துள்ளார். ஆனால் அதற்கு சரத்பாபு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது சென்னையில் உமாபதி தெருவில் உள்ள வீட்டை எனது சொந்த விவசாய நிலத்தை விற்று கொடுத்து அந்த வீட்டை கட்டிக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவருடைய பழைய வீடுகளை புதுப்பித்துக் கொடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்திருக்கிறதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நடிகை ரமா பிரபாவுக்கு தான் கொடுத்ததை தான் திரும்ப பெற்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரிடம் இருந்து எதையும் பிடுங்கவும் இல்லை ஏமாற்றவும் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.