கடைசி வரைக்கும் நாயோடையே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்.! கேலி செய்த ரசிகனை வெளுத்து வாங்கிய சமந்தா..!

samantha-2

தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்தும் செய்து கொண்டார்.

என்னதான் விவாகரத்து ஆனாலும் இன்றுவரை சினிமாவில் நடிப்பதை மட்டும் தவிர்த்ததே கிடையாது அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து நடிகை சமந்தா பல்வேறு திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளார் அதில் தெலுங்கில் சகுந்தலம் யசோதா குஷி போன்ற திரைப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி பாலிவுட்டிலும் சில திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது போதாதென்று தற்போது நடிகை சமந்தா ஹாலிவுட் திரைப் படங்களிலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இதன் காரணமாக தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இந்நிலையில் இன்று காலை எழுந்தவுடன் ஒரு நாய் குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டு நான் இந்த நாய் குட்டியை மிகவும் நேசிப்பதாகவும் இவனை மிகவும் மிஸ் செய்து கொண்டிருந்தேன் எனவும் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் கடைசி வரைக்கும் நாய் பூனை என்று உங்கள் வாழ்க்கை போக போகிறது என கமெண்ட் செய்துள்ளார்.

உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்படி ஒரு விஷயம் நடந்தால் நான் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலி என கருதுவேன் என சமந்தா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

samantha-2
samantha-2