என்னுடைய கடைசி திரைப்படத்தை நீங்கதான் இயக்க வேண்டும் பிரபல இயக்குனருக்கு கோரிக்கை வைத்த ரஜினி.!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

தற்பொழுது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.ரஜினிகாந்த்க்கு வயதானாலும் கூட இவர் நடிக்கும் திரைப்படங்களில் கொஞ்சம் கூட ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு மாறாமல் இளம் பருவத்தில் எப்படி நடித்தாரோ அதே அளவிற்கு தற்போது வரையிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களிலும் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு வருடத்திற்கு மேலாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் இவரின் முறை பெண்களாக மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருவதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் வயது முதிர்ச்சியினால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே அவரால் நடிக்க முடியும் எனவே இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் எப்படியாவது நடித்து முடித்து விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவிடம் எனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். இந்த தகவலை ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள்  கூறி உள்ளார்கள்.