தோல்வியை ஏத்திக்கிட்டு போயிட்டே இருக்கணும்.! ஆவேசமாக பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்..

india-cricket-player
india-cricket-player

2022 காண டி20 உலக கோப்பை போட்டிகளில் அரை இறுதியில் இந்திய அணி அபார தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் இந்திய அணியை ரசிகர்களும் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்த நிலையில் இனிவரும் டி20 உலக கோப்பைகளில் இளம் வீரர்களை களம் இறக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்தது மிக ஏமாற்றமாக இருப்பதாகவும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி நகர வேண்டியது அவசியமானது எனவும். இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதி உடன் மிகுந்த ஏமாற்றம் அளித்ததாகவும்  தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டியது அவசியமானது என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது எனவும் திறமையான இளம் வீரர்களை கண்டறிய கால அவகாசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கான திட்டமிடல் இந்த தொடரில் இருந்து தொடங்குகிறது என்றும் முன்னாள் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய வீரர்கள் புதிய உத்தியோகம் எல்லாமே உற்சாகமளிக்கிறது என்று தெரிவித்துள்ள ஹர்திக்  இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பு எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.