செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதுதான் அவரின் முதல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை கொடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், மான்ஸ்டர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது பிரியா பவானி சங்கர் நயன்தாரா,திரிஷா போன்ற முன்னணி நடிகைகளை விட பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்தவகையில் இந்தியன் 2, பத்துத்தல, ருத்ரம் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிகர் சதீஷை பங்கமாகக் கலாய்த்துள்ளார். அதாவது தற்போது சதீஷ் அண்ணாத்த திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சதீஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
அத்திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதோடு இத்திரைப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்பொழுது நான் என்ன நினைக்கிறேன் என்ற கேள்வியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் சதீஷ், சதீஷ் கூட ஹீரோயினாக நடிக்காமல் போயிடுச்சே என்று கமெண்ட் செய்திருந்தார். இதனைப் பார்த்த பிரியா பவானி சங்கர் உனக்கு என்னப்பா சூப்பரா ஒரு ஹீரோயின் கிடைச்சிட்டா என்று கலாய்த்து உள்ளார்.
Sathish kooda heroine aa nadikka mudiyaama poche…. 🤔🤓🤪 https://t.co/c0QPq7H9Zp
— Sathish (@actorsathish) April 11, 2021