அஜித் முன் நீ பேசுன பேச்சுக்கு இனி உனக்கு வாய்ப்பே கிடையாது..! பிரபல நடிகைக்கு நடந்த பரிதாபமான நிலை

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித்குமார் 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நம்ம அனைவரும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  தீபாவளி தல தீபாவளி என்ற பாடல் பட்டி தோட்டம் பிரபலமானது அதுமட்டுமல்லாமல் இந்த பாடலுக்கு நடமாடிய அஜித் அவர்களுக்கு ஒரு நல்லா வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலை இந்த பாடலுக்கு பிரபல கவர்ச்சி நடிகையான ரகசியாவை ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா என்ற படத்தில் சீனா தானா என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர்தான் நடிகை ரகசியா. அதன் பிறகு நடிகர் அஜித் நடித்த அட்டகாசம் திரைப்படத்தில் கமிட் ஆனார்.

அப்போது இந்தப் படத்தில் அமைந்துள்ள தீபாவளி தல தீபாவளி பாடலுக்கு நடனமாட நடிகை ரகசியாவை ஒப்பந்தம் செய்தனர் அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் அமைந்துள்ள அந்த பாடலை காட்சியாக எடுக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காட்சிகள் இருக்கும் நிலையில் ஷூட்டிங்  பிரேக்கில் தனது காருக்கு அருகே சென்று சேர் போட்டு கால் மேல் கால் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அப்போது அஜித்குமார் அருகில் இருந்ததை கூட கண்டுகொள்ளாமல் அவர் கால் மேல் கால் போட்டு இருந்ததை பார்த்த படக்குழுவினர் எல்லாம் அதிர்ச்சியாகி போய்விட்டனர். ஆனால் நடிகர் அஜித் அவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை எப்போதும் போல சகஜமாகவே இருந்து விட்டார்.

பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அந்த கவர்ச்சி நடிகை நான் கிளம்ப வேண்டும் அதனால் ஷூட்டிங் அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாக நடிகர் அஜித்குமார் இவர் என்னுடைய படத்தில் நடிக்க கூடாது என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அந்த படத்தின் இயக்குனர்  இனிமேல் நீங்கள் பட பிடிப்பு தளத்திற்கு வர வேண்டாம் என்று அவரை திட்டியுள்ளார். அதன் பிறகு அந்த பாடலை அஜித் மற்றும் பல நட்சத்திரங்களை வைத்து படமாக்கப்பட்டது.