தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்து பின் ஒரு கட்டத்தில் முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் ஹீரோயின்னாக என்ட்ரி ஆனார் மீனா. ஆள் பார்ப்பதற்கு செம்ம சூப்பராக மீனா இருந்ததால் வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து கிடைத்தன.
குறிப்பாக டாப் நடிகர்களுடன் ரஜினி, சரத்குமார், அஜித் போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். மேலும் தன்னை முன்னணி நடிகையாக மாற்றிக் கொண்டார் மீனா. இருப்பினும் தமிழ் சினிமா உலகில் ஒரு சில டாப் நடிகர்களுடன் ஜோடி சேர மறுத்து உள்ளார்.
அந்த வகையில் தளபதி விஜயின் படத்தில் இதுவரை ஒருதடவை கூட ஹீரோயின்னாக நடித்தது கிடையாது ஆனால் விஜய் படம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் மீனா ஆடி உள்ளார். அதன்பிறகு மீனா விஜய் படத்தில் நடித்ததே கிடையாதாம் திருமணமாகிய பிறகு சுத்தமான படங்களில் நடிப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தால்..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீனாவின் மகள் நைனிகா விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். படத்தின் ஷூட்டிங்கிற்கு மகளை அழைத்துக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் மீனா.
ஷூட்டிங் முடியும் வரை அங்கேயே மீனா இருந்தார். அப்பொழுது தான் விஜய் வந்து மீனாவிடம் நாம் இருவரும் இப்பொழுது இருக்கிறோம் ஆனால் படத்தில் தான் சேர்ந்து நடிக்க முடியவில்லை என கூறினாராம் மேலும் பேசிய விஜய் என்னை விட உங்களுக்கு அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும் என ஜாலியாக அப்பொழுது சொன்னாராம்.