என் பெயரை சொல்லி கூப்பிட உனக்கு தகுதியில்லை கோபப்பட்ட தேவையானி – சரியான நேரத்தில் திமிரை அடக்கிய மணிவண்ணன்.!

devaiyani-
devaiyani-

90 காலகட்டங்களில்  அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அதிக ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் நடிகை தேவயானி இவர் தமிழை தாண்டி பெங்காலி மலையாளம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வெற்றியை பெற்ற இவருக்கென ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால் சற்று  கொஞ்சம் அகதானமாய் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொள்வாராம்.

ஆனால் அந்த திமிர் தனத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பிரபலங்கள் எடுத்துக்கூறி அடியோடு மாற்றி விட்டனர் என கூறப்படுகிறது . நடிகை தேவயானி ஒரு கட்டத்தில்  இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும்  இனியா, பிரியங்கா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இப்பொழுது படங்களில் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை என்றாலும் அம்மா சித்தி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் புது புது அர்த்தங்கள் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் தேவயானி நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் தேவயானியை பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் களஞ்சியம் அதில் அவர் சொன்னது.

தேவயானியை வைத்து ஒரு புது படம் பண்ணிக் கொண்டிருக்கும்போது போட்டோ ஷூட்டில் தேவயானியை வைத்து பூபதி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது தேவயானி இங்கே திரும்புங்கள் என சொல்லிவிட்டார் கோபமடைந்த தேவயானி நீங்கள் எப்படி எனது பெயரை வைத்து கூப்பிடலாம் என கேட்டு செம கோபமாகி உள்ளாராம் பின் இயக்குனர் கேமராமேன் தவிர என்னை யாரும் தேவயானி என கூப்பிடவே கூடாது என ஓவராக பேசிவிட்டாராம்.

மேலும் அந்த போட்டோகிராபர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லிவிட்டார். அதே சமயம் அவர் என்னை இனி மேடம் என்றுதான் அழைக்கவேண்டும் எனவும் கூறினார். போட்டோகிராஃபர் உடன் சேர்ந்து பலரும் உட்கார்ந்து மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என உட்கார்ந்து விட்டனர் இந்த நிலையில் தேவயானியை முரளி போய் சமாதானப்படுத்தினார் ஆனால் தேவயானி சமாதானம் ஆகவில்லை என்ற பிரச்சனை அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது.kalanchiyam

இந்த சமயத்தில்தான் பத்து நாட்கள் கழித்து நடிகர் மணிவண்ணன் சார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தார் வந்த உடனேயே அவர் அந்த பொண்ணு எங்கே என கேட்டார். தேவயானி வந்ததும் மணிவண்ணன் சார் கேட்ட முதல் வார்த்தை எதுக்குமா பெயர் வைத்திருக்கிறார்கள் பெயர் வைத்து கூப்பிடுவதற்கு தானே என கேட்டார். இங்கெல்லாம் கூப்பிடனும் இங்கு கூப்பிட கூடாது என்று பெயர் வைக்கிறார்களா எல்லோரும் மணிவண்ணன் சார் இங்க வாங்க போங்க மணிவண்ணன் வரான் போறான் அப்படின்னு சொல்லும் பொழுது நான் அவர்களை எல்லாம் கூப்பிட்டு மன்னிப்பு கேட்க சொல்ல முடியுமா.?

பெயரை வைத்து கூப்பிடுவதற்கு தான் வைத்திருக்கிறார்கள் என கூறினார் உன் பெயரை நாலு பேர் சொல்லும் பொழுது நாலு பேருக்கு உன் பெயர் தெரியும் என்று சொன்னார். ஆனால் நீ நடந்து கொண்ட விதம் சரியில்லை முதலில் நீ தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார். இதை உணர்ந்துகொண்ட பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ஆல்பத்தை பார்த்து விட்டு பூபதி நீ சிறப்பாக பண்ணி இருக்கிறாய் என் மேல தான் தப்பு என  கூறி தனது தவறை உணர்ந்தார் தேவயானி