தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
லோகேஷ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஏனென்றால் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்தது இதனால் லோகேஷின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அடிக்கடி கூறி வந்தாலும் இதுவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் மிஸ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், உள்ளிட்டோர் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் 50 வயது கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவருக்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பகத் பாசிலிடம் கேட்கும் போது தளபதி 67 திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த பகத் பாசில் தளபதி 67 திரைப்படம் எல்சியுவில் ஒரு பகுதி தான் ஆகையால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு இருக்கு என்று கூறியிருக்கிறார் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தாலும் நெடிசங்கள் நடிகர் விஜய்யை பலவிதமாக பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அனைத்து புகழையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அது மட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியவே விஜய்யால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் திரும்பும் பக்கமெல்லாம் கன்னிவெடி என்பது போல் திரும்பும் பக்கம் எல்லாம் வில்லனாக இருந்தால் அவர் எப்படி அனைவரையும் சமாளிக்க போகிறார்.
அது மட்டுமல்லாமல் நடிப்பின் நாயகன் பகத் பாஸில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக தான் நடிப்பார் அப்படி இருக்கையில் அனைத்து புகழையும் இவர்கலே எடுத்துக் கொண்டு சென்று விடுவார்களே விஜய்க்கு என்ன தான் மிஞ்சும் என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியை சமாளிக்காத விஜய் இவர்களை எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.