நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வரலாறு முக்கியம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் ரொமான்ஸ் மற்றும் காமெடி கட்ச்சிகளின் அம்சங்கள் அனைத்தும் இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஜீவா அவர்கள் ஒரு ரொமான்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்துள்ள நிலையில் அவருடைய காமெடி இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக காஷ்மீரா மற்றும் பிரக்யா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என பட குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜீவா அவர்கள் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக தற்போது நடிகர் ஜீவா அவர்கள் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளதாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும் இந்த படம் வெற்றியடையுமா அடையாதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் இதோ…