தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் தனது 65 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது “பீஸ்ட்” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் சிறப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தின் மிகப்பெரிய தொகையில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 75% முடிவடைந்த நிலையில் மீதி கட்ட படப்பிடிப்பு தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தற்போது கேரளாவில் எடுக்கப்பட்டு வருகிறது அடுத்ததாக இருக்கின்ற மீதி படபிடிப்பை பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா நாட்டில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தில் விஜய், டாம் சாக்கோ, பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடிக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் மலையாள நடிகர் டாம் சாக்கோ என்பவர் நடித்து உள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது சமீபத்தில் டாம் சாக்கோ நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார் அப்போது இந்த படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் கூறியது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனித்துவமான நகைச்சுவையை எதிர்பார்க்கலாம் நகைச்சுவையை சீன்களை அருமையாக எடுத்து உள்ளார்.
இயக்குனரை அடிச்சுக்க ஆளே இல்லை அவ்வளவு திறமையானவர் என கூறினார். மேலும் என்னுடைய கதாபாத்திரம் நகைச்சுவையான ஒன்றாக இருக்காது ஆனால் படத்தில் காமெடி நிச்சயம் இருக்கிறது என தெரிவித்தார்