தமிழ் சினிமாவில் ஒன்று, இரண்டு ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர்கள் பலரும் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்திப்பது வழக்கம். அதற்கு காரணம் சொன்னபடி ரீலிஸ் ஆகாது தான். அதன் பிறகு படம் வசூலில் பாதிபத்தோடு, தோல்வியை சந்திக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இதனை தற்போது வரும் டாப் நடிகர்கள் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு சிறப்பான தேர்ந்தெடுத்து அதற்கு ஏத்த மாதிரியான நம்பிக்கை உள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சரியாக டாப் நடிகர்கள் செலக்ட் செய்வார்கள். சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் படம் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடிக்கும்.
ஆனால் நடிகர் தனுஷின் படத்துக்கு மட்டும் இப்படி ஒன்னு நடந்து உள்ளது. தனுஷ் சமீபகாலமாக ஹிட் படங்களை சாதாரணமாக கொடுத்து வருகிறார் அசுரன், கர்ணன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் படம் திரையரங்கில் தான் வெளிவரும் என தனுஷ் பெரும் நம்பிக்கை கோட்டை கட்டி இருந்தார்.
ஆனால் தயாரிப்பாளரோ திடீரென ஒரு புதிய முடிவை எடுத்து தனுஷ் கனவில் மண்ணை அள்ளி போட்டார். இந்த திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகாமல் அதற்கு மாறாக OTT தளத்திற்கு விற்றுவிட்டார் ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த்.
சற்றும் எதிர்பார்காத தனுஷ் எம்மாந்துபோனார். இதனால் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட் பற்றியும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்கிறார் இதிலிருந்தே தெரிகிறது தயாரிப்பாளர் மீது என்ன கடுப்பில் இருக்கிறார் என்று மேலும் இவர் தயாரிக்கும் படங்களில் இனி தனுஷ் நடிக்கப் போவதில்லை என்ற தகவலும் கசிகின்றன.
ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தனுஷ் திரையரங்கில் ஜகமே தந்திரம் வெளியிட ஆசை அது நிறைவேறாத ஆசையாகவே மாறியுள்ளது. அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது.