சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவர் இப்பொழுது இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் கைகோர்த்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெய்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் ஒரு வயதான கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதால்..
இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, கன்னட டாப் ஹீரோ சிவ ராஜ்குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பாட்ஷா இந்த திரைப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருப்பார்.. இந்த திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பு வசனம் ஸ்டைல் என அனைத்தும் வேற லெவலில் இருக்கும் அதே போல ரஜினிக்கு நிகராக இந்த படத்தில் நடித்த ரகுவரன் மார்க் ஆண்டணி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
பாட்ஷா படத்தில் முதலில் ரஜினிக்கு வில்லனாக ஆனந்தராஜ் நடித்திருப்பார் அந்த காட்சி வேற லெவலில் இருக்கும் ரஜினியை கட்டி வைத்து ஆனந்தராஜ் அடிப்பார்.. பாட்ஷா படத்தில் ஆனந்தராஜ் எப்படி கமிட் ஆனார் என்பது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் அவர் சொன்னது பாட்ஷா படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு ரிலீஸ்க்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ரஜினிகாந்த்..
ஆனந்தராஜை அழைத்தாராம் அப்பொழுது ரஜினிகாந்தை சந்தித்த ஆனந்தராஜ் பாட்ஷா படத்தில் ஒரு சிறிய காட்சி உள்ளது அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார் தாங்கள் பலரையும் அதில் தேர்வு செய்ய பார்த்தோம் ஆனால் நீங்கள் தான் அதற்கு சரியான ஆள் உங்களுக்கு சரி என்றால் நீங்கள் நடியுங்கள் என ரஜினி தெரிவித்தாராம்..
உடனே அது என்ன காட்சி என்று ஆனந்தராஜ் கேட்டவுடன், கம்பத்தில் கட்டி வைத்து என்னை அடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்தாராம்.. இதைக் கேட்ட ஆனந்தராஜ் நான் இந்த காட்சியில் நடித்தால் கட்டாயம் திரையரங்கில் உள்ள ஒட்டுமொத்த ஸ்கிரீன்களும் கிழியும் உங்கள் ரசிகர்கள் என்னை கிழித்து தொங்க விடுவார்கள் என தெரிவித்தாராம்..
உடனே ரஜினி அதனால் தான் உங்களை தேர்வு செய்தேன் நீங்கள் என்னை அடிக்கும் பொழுது அந்த மாதிரி எதுவும் நடக்காது என்னை அடிக்கும் அளவிற்கு தைரியமான வில்லன் என்றால் அது நீங்கள் மட்டும் தான் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் இதை கேட்டு மெய் சிலிர்த்துப் போன ஆனந்தராஜ் உடனே நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் எனக் கூறி ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று சென்றாராம்.