தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர் பிரபலமான நமது தயாரிப்பாளர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
காதலுக்கு கண்கள் இல்லை என்பது நிஜம்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் அமைந்தது பலருக்கும் தெளிவாக புரிந்துள்ளது என்று நன்றாக தெரிகிறது. அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தை பற்றி பலரும் கிண்டலும் கேலியும் செய்து வருவது வழக்கமான செயல்தான்.
ஆனால் இதைப் பற்றி மகாலட்சுமியும் ரவீந்தரும் கொஞ்சம் கூட வருத்தப்படுவது போல் தெரியவில்லை அந்த வகையில் இவர்கள் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் அடிக்கடி தங்கள் திருமணம் பற்றிய சமூக வலைதள பக்கத்தில் பேட்டி கொடுப்பது புகைப்படம் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
பொதுவாக ரவீந்தர் சமூக வலைதள பக்கத்தில் குரல் கொடுப்பது வழக்கமான செயல் தான் அந்த வகையில் வனிதா திருமணத்தின் பொழுது கூட அவர் குரல் கொடுத்திருந்தார் அப்பொழுது மூன்றாவது திருமணம் பற்றி பல்வேறு குற்றசாட்டு வைத்த ரவிந்தர் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
மேலும் இதனைக் தொடர்ந்து வனிதா ரவீந்தரை குறிப்பிட்டு கூறாமல் பல விஷயங்களை கூறி சமூக வலைபக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இதை எதையும் போட்டு கொள்ளாத மகாலட்சுமி ரவீந்திரருடன் நான் வாழ்ந்து காட்டுவேன் என சவால் விட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்தர் சமீபத்தில் தான் முன்னணி பிரபலம் ஒருவருக்கு திருமணம் நடந்தது அதாவது நயன்தாராவின் திருமணத்தை தான் கூறியிருந்தார் அந்த வகையில் அந்த திருமணம் கூட இந்த அளவிற்கு வலைதள பக்கத்தில் பிரபலமாகவில்லை ஆனால் என்னுடைய இந்த திருமணம் இந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் என்னுடைய திருமணத்தை வைத்து பலரும் காசு பார்த்து விட்டார்கள் குறிப்பிட்டு சொல்ல போனால் நயன்தாரா திருமணத்தை விட என்னுடைய திருமணத்தை வைத்து தான் பலரும் காசு பெற்றுள்ளார்கள் என்று ரவிந்தர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.