தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் தற்பொழுது நடிகர் சங்க பொது செயலாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலையில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் விஷால் அவர்களுக்கு வயதான பிறகும் தற்பொழுது வரையிலும் திருமணம் நடக்காமல் இருந்து வரும் நிலையில் இது குறித்து பெண்மணி வருத்தமடைந்து இருக்கிறார் அந்த வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஷால் மற்றும் அனிஷா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள கோஹினுரில் நடைபெற்றது.
மேலும் இவர்களுக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது வரையிலும் அவர்களுடைய திருமணம் நடைபெறவில்லை. எனவே பலராலும் இது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து பேசிய விஷாலின் தந்தை விஷால் ஏற்கனவே என்னிடம் தயவு செய்து என்னை திருமணம் செய்து கட்டாயப்படுத்தினார்கள் என்று சொல்லிவிட்டாராம்.
மேலும் எனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று தோணும் பொழுது நான் செய்து கொள்கிறேன் அப்பா என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என சொல்லிவிட்டார் அதனால் நாங்களும் விஷால் கட்டாயப்படுத்தவில்லை உள்ளிட்ட பல தகவலை பகிர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மூன்று மதமுறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக் கொடுத்த இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விழாவில் பங்கு பெற்ற பாட்டி ஒருவர் ஊருக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாது மனசுக்கு கஷ்டமா இருக்கிறது எனக் கூறிய வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஊருக்கே கல்யாணம் பண்ணி வக்கறீங்க. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாதது மனசுக்கு கஷ்டமா இருக்கு – விஷாலை பார்த்து வருத்தப்பட்ட பெண்மணி. pic.twitter.com/w7EfMCFpiZ
— Blue Sattai Maran (@tamiltalkies) November 6, 2022