தோனி போல் பந்தை பறக்கவிடும் யோகிபாபு.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ

காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. வடிவேலு எந்த அளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்துள்ளாறோ அதே அளவிற்கு யோகி பாபு தனது சிறந்த காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு நாளைக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருந்த கர்ணன் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படத்தில் வடமலையான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதோடு விஜய்யுடன் இணைந்த இவர் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திலும் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்துள்ளது என்றும் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் கூறி உள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் நடித்து முடித்து பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்காக ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் பூச்சாண்டி, சலூன், அயலான், வெள்ளை உலகம், டாக்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்குகால் பொழுதைக் கழிப்பதற்காக யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நிக்க கூட நேரமில்லாத இவருக்கு தற்போது மிகவும் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இதோ அந்த வீடியோ.