தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த காமெடியின் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் யோகிபாபு இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தனம் ஆகிய இருவர்களும் காமெடியாக நடித்து அதன் பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வகையில் அதன் பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் அவர்கள் காமெடியனாக நடிக்க முடியாது என்று தீர்மானமாக இருந்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி மிகப் பிரபலமான காமெடி நடிகராக மாறியவர்தான் நடிகர் யோகிபாபு இவர் தற்சமயம் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைபடங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைபடத்தில் காமெடி வேடத்திற்கு முதல் சாய்ஸாக இருப்பது நடிகர் யோகிபாபு தான். மேலும் இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும் தற்போது வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் இறங்கி நடிப்பதில் திறமை வாய்ந்தவர்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த மண்டேலா இந்த திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பொம்மை நாயாகி என்ற ஒரு திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை புது இயக்குனர் அவர்கள் தான் இயக்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள்தான் தயாரித்துள்ளார் இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு கேக் வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.