தளபதிக்காக மறுவார்த்தை பேசாமல் யோகி பாபு செய்த செயல் ..! மிரண்டு போன பீஸ்ட் படக்குழுவினர்கள்..!

yogibabu-3
yogibabu-3

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு இவர் திரைப்படங்களில் காமெடி நடிகரக நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹரி இயக்கி வரும் ஏவி 33 திரைப்படத்தில் யோகிபாபு நடித்து வருகிறாராம் இந்த திரைப்படத்தில் அருண்விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபு திடீரென கிளம்பி 500 கிலோ மீட்டர் பயணித்து  சென்னைக்கு வந்துள்ளர் அது எதற்காக என்றால் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு விஜயுடன் ஐந்தாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார் ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம், சர்க்கார், மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

yogi babu
yogi babu

இவ்வாறு தளபதி விஜயின் மீது உள்ள பாசத்தினால் 500 கிலோ மீட்டர் பயணித்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டது பீஸ்ட் திரைப்பட படக்குழுவினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்த 3ஆம் கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சகோ ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் விரைவில் விஜய்யும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து யோகிபாபு விடம் கேள்வி எழுப்பியபோது என்னால் எந்த ஷூட்டிங்கும் தடைபடக் கூடாது என்பதன் காரணமாகவே 500 கிலோமீட்டர் பயணம் செய்து அங்கு சென்றேன் என அவர் கூறியுள்ளார்.