பிரபல நடிகருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் யோகிபாபு.? அப்போ படம் ஹிட்டு தான்.

yogi babu
yogi babu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். மக்கள் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஓரளவு நல்ல வசூலை அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இருப்பினும் சுமார் 250 கோடியை வசூலித்து நல்லதொரு படமாகப் பார்க்கப்படுகிறது ஆனால் அதை நிறைவேற்றத் தவறியது பீஸ்ட். போனது போகட்டும் என்ற முடிவோடு அடுத்ததாக தனது 66 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.  விஜய்யின் 66 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு  தயாரித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணன் தம்பியாக  பல முன்னணி ஜாம்பவான்கள் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சரத்குமார் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர் ஷியாம் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் விஜய் கேரியரில் மிக சிறப்பான ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோகள் மற்றும் படத்தின் ஹீரோயின் ஆகியோர்களை தேர்வு செய்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான காமெடியனையும் தேர்வு செய்துள்ளது படக்குழு. அந்த வகையில் சர்க்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்த யோகி பாபு மீண்டும் ஒருமுறை விஜயுடன் இணைந்து  நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்து  உள்ளது.