கார்த்தியின் பையா திரைப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சியில் யோகிபாபு.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

paiya
paiya

தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. தற்பொழுது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் யோகி பாபுவை தங்களது திரைப்படத்தில் நடிக்க வைக்க விருப்பிகிரார்கள். அதோடு முன்னணி நடிகர், நடிகைகள் முதல் இளம் நடிகர், நடிகைகள் வரை அனைவருக்கும் ஃபேவரட் காமெடி நடிகர் யோகிபாபு.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து தற்போது தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் காமெடி நடிகர் வடிவேலு அளவுக்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது யோகிபாபு ஒரு படத்திற்கு ஒரு நாள் மட்டும் நடிக்க 10 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் ஜிம் பாய், சீரியல் ஆக்டர் போன்றவற்றில் நடித்து பிரபலம் அடைந்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இவர் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார் எனவே ஒவ்வொரு கட்டத்திலும் தனது கடின உழைப்பினால் உயர்ந்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளுசபா நிகழ்ச்சியில் கூட பணியாற்றி வந்தார். அந்தப் வகையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கார்த்திக், தமன்னா ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்திலும் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

paiya
paiya

இத்திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் ஜிம் பாய்களில் ஒருவராக இவரும் நடித்துள்ளார். இதுவரையிலும் யாருக்கும் இவர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் தெரிந்து இருக்காது ஆனால் தற்பொழுது அவர் நடித்திருந்த அந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.