கால்பந்தை ஒரே அடியில் பறக்கவிட்ட யோகிபாபு.! இதுதான் மிரட்டல் அடியோ என கலாய்க்கும் ரசிகர்கள்

yogi babu
yogi babu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் யோகிபாபு. இவர் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக பணியாற்றி வந்தார் அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் பின்பு 2009ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்படியே படிப்படியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ஒரு ஒரு திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார். தன்னுடைய பாடி லேங்குவேஜ் மூடி தோற்றத்தை வைத்து காமெடி செய்வதில் இவர் வல்லவர்.

யோகி பாபு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதிலும் மாநில அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் அதிகமாக  பங்கேற்றுள்ளார் இதனை சமீபத்தில் நாம் படித்திருப்போம்.

அந்தவகையில் யோகிபாபு கிரிக்கெட் பந்தினை பறக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுள்ள யோகிபாபு அங்குள்ள இளைஞருடன் கால்பந்து விளையாடி உள்ளார்.

அப்பொழுது கால்பந்தை ஒரே அடியில் பறக்க விட்டுள்ளார் இதை பார்த்த பல ரசிகர்கள் மெஸ்ஸிக்கு டஃப் கொடுப்பார் போல என பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் யோகி பாபு அவர்கள் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.