டாப் 10 நடிகர்களில் கெத்து காட்டும் யோகிபாபு..! ஒரேடியாக பின்னுக்குத் தள்ளப்பட்ட தல அஜித்தின் பெயர்..!

yogibabu
yogibabu

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் யார் யார் என்ற தகவல்கள் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இந்த ஆண்டில் கோலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர்கள் யார் என்ற பட்டியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது சினிமா துறையில் தமிழ் சினிமா ஆனது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பெருமை தக்க விஷயமாக அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் நம்முடைய தமிழ் நடிகர்கள் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது ஏனெனில் அவர்களுடைய திறமை தான் தமிழ் சினிமா வளர்வதற்கு காரணம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் மட்டும் தான் எப்பொழுதும் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார் அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த இடத்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளவர் தளபதி விஜய் பொதுவாக தற்போது அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் இவர்தான் என அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல ரசிகர்களும் அதனை கொண்டாடி வருகிறார்கள் மேலும் மூன்றாவது இடத்தில் நடிகர் தனுஷ் உள்ளார்.

இதை தொடர்ந்து சூர்யா நான்காமிடத்தில் சிம்பு ஐந்தாம் இடத்தில் ஆர்யா ஆறாவது இடத்தில் எஸ் ஜே சூர்யா 7வது இடத்தில் சிவகார்த்திகேயன் 8வது இடத்தில் யோகிபாபு ஒன்பதாவது இடத்தில், விஜய்சேதுபதி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் தல அஜித்தின் பெயர் மட்டும் இடம் பெறாத காரணத்தினால் ரசிகர்கள் பெரும்  கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அஜித்தின் திரைப்படம் இந்த ஆண்டில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை என்பது தான் காரணம்.