அடேங்கப்பா.. யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? மூக்கு மேல் விரல் வைக்கும் ரசிகர்கள்

yogi babu
yogi babu

Yogi babu : தமிழ் சினிமாவில் பாப்புலரான நடிகர் யோகி பாபு. தற்பொழுது கூட ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் காமெடியன்னாக நடிக்க மறுபக்கம் ஹீரோவாகவும் வெற்றி கண்டு வருகிறார். இன்று சினிமா உச்சியில் இருக்கும் யோகி பாபு ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம்.. திரையில் நடிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து  படிப்படியாக முன்னேறி இன்று இந்த இடத்தில் இருக்கிறேன்.

என அவரை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இப்படிப்பட்ட யோகி பாபு தற்போது வருடத்திற்கு குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வருவதால் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார். இதனால் யோகி பாபு சம்பளம் குவிந்து கொண்டே இருக்கிறது ஹீரோவாக நடிக்க சுமார் 3 லிருந்து 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

காமெடியான நடிக்க 1 கோடி இருந்து 2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு அவருடைய சொந்த ஊரான ஆரணியில் சில வீடுகள் மற்றும் சில நிலங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனது சொந்த ஊரில் கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் யோகி பாபு.   தன்னை நம்பி வருபவர்களுக்கு யோகி பாபு பல உதவிகளையும் செய்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 40  லிருந்து 70 கோடிகள் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் என்னும் வெளிவரவில்லை.