ஐந்து மொழிகளில் கெத்து காட்டும் யோகி பாபு வின் புதிய திரைப்படம்..! விஜய் அஜித் எல்லாம் இனி ஓரம் போக வேண்டியதுதானா..!

yogi babu-1
yogi babu-1

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு.  இவ்வாறு இவர் பிரபலம் ஆவதற்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என கொடிகட்டிப் பறந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள் அந்த வகையில் வடிவேலு சந்தானம் ஆகியோர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க ஆர்வம் வந்ததற்கு பிறகு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்கள். ஆனால் நடிகர் யோகிபாபுவுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் விட்டதே கிடையாது.

இதன் காரணமாக அவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் பேய்மாமா, பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற பல்வேறு திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி அடைந்து தற்போது கிருமி என்ற திரைப்படத்தை இயக்கிய அனுசரன் என்பவர் பன்னிகுட்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி, டைகர் தங்கதுரை, கருணாகரன், சிங்கம் புலி ,போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

இத்தகைய திரைப்படமானது 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் வைரஸ் தொற்றின் காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழா தள்ளிக்கொண்டே போனதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் தமிழ்மொழி மட்டுமின்றி கேரளா கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் வெளியாக உள்ளது.

yogi babu-1
yogi babu-1