முழுசாய் வடிவேலுவாக மாறிய யோகி பாபு..! அது மட்டும் வேண்டாம் எனக்கூரும் ரசிகர்கள்..!

vadivelu
vadivelu

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்த வெற்றி கண்டுள்ளார்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு நடித்த ஒவ்வொரு திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளும் என்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவருடைய காமெடி கதாபாத்திரங்கள் காமெடி நிகழ்ச்சிகள் அனைத்துமே சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்னதான் தன்னை தானே தாழ்த்திக் கொண்டு காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நல்ல விஷயங்கள் அவரை பற்றி வருகிறதோ இல்லையோ அவரைப் பற்றிய பல்வேறு தீய செய்திகளும் வெளியாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் வடிவேலு அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்பொழுது இயக்குனரிடம் இன்று எந்த காட்சிகள் நடிக்கப் போகிறோம் என்பதை கேட்டு ஒரு முறை ரிகர்சல் பார்த்துவிட்டு அதன் பின்பு தான் நடிக்க தொடங்குவாராம்.

அந்த வகையில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே ஒரு நாள் நடிப்பாராம். தற்பொழுது அவரை போலவே சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் ஒரு காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு தான். அந்த வகையில் யோகி பாபு இன்று எந்த காட்சிகளில் நடிக்க போகிறோம் என்பதை கேட்டுவிட்டு அதன் பிறகு தான் நடிக்கிராரம்.

மேலும் யோகி பாபு அவர்கள் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் மட்டுமே நடிக்கிறாராம். இதை பார்த்தால் வடிவேலு நிலைமைக்கு யோகி பாபு தள்ளப்படுவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.