இயக்குனர் அவதாரம் எடுக்கும் யோகி பாபு – எந்த மாதிரியான கதை வைத்திருக்கிறார் தெரியுமா.? வெளிவந்த குட் நியூஸ்..

yogi-babu
yogi-babu

சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் தனது திறமையை இன்னும் வளர்த்துக்கொண்டு சினிமா உலகில் முன்னேறுகின்றனர் அந்த வகையில் நடிகர் யோகி பாபு காமெடியனாக தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முதலில் ஓட ஆரம்பித்தார் இவர் இதுவரை அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகரின் படங்களில்..

தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார் அதன் பிறகு சோலோ ஹீரோவாக இவர் நடித்த படங்களும் வெற்றி பெற்றன இப்படி ஓடிக் கொண்டிருக்கும் யோகி பாபுவிற்கு நாளுக்கு நாள் அவரது மார்க்கெட்டும் அதிகாரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது கூட ஏகப்பட்ட படங்கள் கையில் இருக்கின்றன.

அந்த வகையில் வாரிசு, துணிவு, ஜெயிலர் போன்ற படங்களில் கூட இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் யோகி பாபு திடீரென ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் இது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது அது என்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நேற்று அதிகாலை யோகி பாபு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போய் வந்து பேட்டி கொடுத்தார்.. அதில் அவர் சொன்னது  ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் மேலும் பேசிய அவர் நான் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தினார்..

காமெடி கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். அதற்கான கதை திரைக்கதை ஆகியவற்றை ரெடி செய்து வைத்துள்ளேன் தயாரிப்பாளர் ஓகே ஆனவுடன் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என கூறியிருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.