தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகிபாபு இவர் அறிமுகமான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடி நடிகர்களும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் பல நடிகர்கள் காமெடியில் ஆர்வம் காட்டுவது குறைத்துவிட்டார்கள்.
அந்த வகையில் சந்தானம் மற்றும் வடிவேலு ஆகியவர்கள் தற்போது காமெடி கதாபாத்திரத்தில் நடிக்காதன் காரணமாக யோகிபாபுவின் மார்க்கெட் உயர்ந்தது மட்டுமல்லாமல் அவருடைய மண்டையை பார்த்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் யோகிபாபு தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் பலவும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு திகில் திரைப்படத்தில் யோகி பாபு அவர்கள் கதாநாயகனாக நடிக்க உள்ளார் இத்திரைப்படத்தில் சக்தி சிதம்பரம் இயக்குனராக பணியாற்ற உள்ளார் மேலும் இத்திரைப்படத்தில் யோகிபாபு மட்டுமின்றி எம்எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், கோவை சரளா போன்ற பிரபல காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் திரையில் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் பெருமளவு கமெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சமீபத்தில்தான் இத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த போஸ்டர் ஆனது இந்தி பூட் திரைப்படத்தில் போஸ்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பி போல யோகி பாபுவின் முகத்தை வைத்து வெளியிட்டுள்ளார்கள்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இது பேய் மாமா திரைப்படம் இல்லை காப்பி மாமா திரைப்படம் என்று கலாய்த்து வருகிறார்கள்.