தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாக பாத்திரங்களில் நடித்து தற்போது மிகப்பெரிய காமெடி நடிகனாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் யோகி பாபு இவ்வாறு இவர் பிரபலமானது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தில் இவருடைய காமெடி பல ரசிகர்களுக்கும் பிடித்ததன் காரணமாக இவர் தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக ஆகிவிட்டார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடிப்பது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
இன் நிலையில் யோகி பாபுவை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு ஒரு தயாரிப்பாளர் அவரிடம் சென்றுள்ளார் அப்பொழுது யோகி பாபு கதை கேட்காமல் இரண்டு கோடி சம்பளம் கேட்டாராம். அதுமட்டுமில்லாமல் வரும்போது அந்த தயாரிப்பாளர் இடம் ஒரு கோடி அட்வான்ஸ் எடுத்து வாருங்கள் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவை மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
இதனால் அந்த தயாரிப்பாளர் படத்தின் கதையை கூட கேட்காமல் பண விஷயத்தில் இப்படி இருக்கிறார்கள் என்று ஒரேடியாக டாட்டா காட்டிவிட்டு ஓடிவிட்டாராம். இவ்வாறு யோகி பாபு நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் கண்டிப்பாக இவருடைய கேரியர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப் போகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே சில சிறு நடிகர்கள் கதை தேர்வு செய்வதில் தடுமாறி தங்களுடைய இமேஜை தாங்களே டேமேஜ் செய்து தற்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் இந்நிலையில் இப்படி ஒரு நிலைமை யோகி பாபுவுக்கு வர வேண்டாம் என்றால் அடுத்த திரைப்படத்தின் கதையை அவர் மிகவும் ஆண்டு ஆராய்ந்து நடிப்பது நல்லது. இல்லையென்றால் அது பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் என தெரித்து ஓடிய தயாரிப்பாளர் எச்சரித்துள்ளார்.