தமிழ் சினிமாவில் நடிகர்களின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகிறதோ அதுபோல காமெடி நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் காமெடி நடிகர்கள் என்றால் நம் மனதிற்கு வருவது செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்றவர்கள் தான்.
ஆனால் தற்போது இளம் காமெடி நடிகர்கள் பலரும் மிக வேகமாக சினிமாவில் வளர்ந்து வருகின்றனர். அதற்கு உதாரணம் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் பின்பு வெள்ளி திரையில் பல படங்களில் காமெடியனாக நடித்து ஒரு கட்டத்தில் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வருகிறார்.
இது தவிர யோகி பாபு தர்ம பிரபு, மண்டேலா, கூர்கா போன்ற சில படங்களில் சோலோ ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக மண்டேலா படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்று தந்தது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் யோகி பாபுவை பற்றிய செய்தி தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
அது என்னவென்றால் யோகி பாபு தற்போது 41 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதைக் கேட்ட சினிமா பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் முன்னணி நடிகர்களே இரண்டு மூன்று படங்களில் தான் கமிட் ஆகி நடிக்கின்றனர். ஆனால் யோகி பாபு இத்த
னை படங்களை கைவசம் வைத்திருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. அண்மை காலமாக இதுபோன்று நடிகர் விஜய் சேதுபதி தான் வருடத்திற்கு 10, 11 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என அதிகம் பேசப்பட்டது ஆனால் தற்போது விஜய் சேதுபதியையும் மிஞ்சியுள்ளார் யோகி பாபு என கூறப்படுகிறது.