ரசிகர்களை சிரிக்க வைக்க “டைம் டிராவல்”பண்ணும் யோகி பாபு – படத்தை இயக்க போவது யார் தெரியுமா.?

yogi babu
yogi babu

சமீபகாலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும், அதேசமயம் ஒரு சில கருத்துக்கள் உள்ள காமெடி கலந்த படங்களில் சோலோவாகவும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் யோகி பாபு. இதனால் நாளுக்கு நாள் யோகிபாபுவின் சினிமா பயணம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய மற்றும்  காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக விஜயின் 66 மற்றும் ஹீரோவாக புதிய படங்களிலும் கமிட்டாகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் கண்டேன் காதலை, ஜெயம்கொண்டான், இவன் தந்திரன், பூமாரங் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ஆர் கண்ணன்.

இவர் இப்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் அதேபோல மிர்ச்சி சிவாவை வைத்து காசேதான் கடவுளடா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் இந்த இரண்டு படங்களுமே வெளிவர ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது இது இப்படியிருக்க அடுத்ததாக காமெடிக்கு பெயர்போன யோகி பாபுவை வைத்து ஒரு டைம் டிராவல் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவன் வேடம் அணிந்து கதாநாயகனாக நடிக்க உள்ளார் யோகிபாபு. இந்த படம் ஒரு டிராவல் படம் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் கூர்கா, தர்ம பிரபு, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் வரிசையில் இந்தப் படமும் யோகிபாபுவுக்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என படக்குழு கூறியுள்ளது.

ஈசிஆரில் 50 லட்சம் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு படத்தை எடுக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது படத்தின் கதைக்கு ஏற்ற உடை மற்ற ஹீரோ ஹீரோயின்களை படக்குழு தேர்வு செய்து வருகிறாராம் வெகு விரைவிலேயே ஒரு சூப்பர் படத்தை கொடுக்க ரெடியாக இருக்கிறதாம்.