தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நல்ல காமெடியை வெளிப்படுத்தி உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகன் என்றால் அது யோகி பாபு தான்.
ஆம் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல படங்களில் மட்டுமே நடித்து தனது காமெடி திறமையை பெரிய அளவில் வெளிகாட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார் இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் டாப் நடிகர்கள் தொடர்ந்து அவரை புக் செய்து வருகின்றனர். யோகி பாபு அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் நடித்தும் கொண்டிருக்கிறார். இது போதாத குறைக்கு அவ்வபொழுது யோகி பாபு சோலோ ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். இப்பொழுது கூட பல்வேறு புதிய படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
சினிமா உலகில் இப்படி சூப்பராக ஜொலிக்கும் இவர் நிஜ வாழ்க்கையிலையும் தனது மனைவி உடன் அழகாக வாழ்ந்து வருகிறார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் யோகிபாபுவுக்கு அண்ணனும் இருக்கின்றார்.
அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே யோகி பாபுவை உரித்து வைத்திருக்கிறீர்கள் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்திய வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..