தற்பொழுது காமெடி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு தற்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகர்,நடிகைகள் என்று
அனைவரும் யோகிபாபுவை தங்களது திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிக்க வைக்க ஆசை பட்டு வருகிறார்கள்.
இவர் காமெடி நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்கள் திரை உலகினர்கள் என்று அனைவர் மனதிலும் தனக்கென்று ஒரு இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து மண்டேலா திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.இத்திரைப்படம் ஒடிடி வழியாகவும்,
தொலைக்காட்சிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இவர் சினிமாவில் வடிவேலு எப்படி பிரபலம்மடைதாரோ அதே அளவிற்கு தற்போது
சினிமாவில் வளர்ந்து உள்ளார்.தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒரு நாளைக்கு பத்து லட்ச ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். அந்த வகையில் இவருக்கு
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகையை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார் யோகிபாபு. அதாவது நயன்தாரா நடிப்பில் எப்படி மிரட்ட வேண்டும் என்பதை சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு கற்றுத் தந்துள்ளார். ஆனால் இந்த நடிகையின் நடிப்பை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் மிரண்டு விட்டேன் நான்.
ஷீலா ராஜ்குமார் இவரை நடிப்பு திறமையை பார்த்து தான் மிரண்டு விட்டதாக யோகி பாபு கூறியுள்ளார். இவர் மண்டேலா திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்து வந்தார். அவ்வப்போது இவரின் எதார்த்த காமெடி மிகவும் சூப்பராக அமைந்தது இவருக்கு இப்படி ஒரு திறமை இருப்பதை நான்
பார்த்து வியந்தேன். அதோடு ஷீலா ராஜ்குமார் தனது திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் ஒப்புதலோடு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்று
யோகிபாபு ஹீலா ராஜ்குமாரை கூறியிருந்தார்.
இதற்கு முன்பு ஷீலா ராஜ்குமார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அழகிய தமிழ் மகள் திரைப்படத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு திரௌபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது இதன் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.