நேற்று ஒரு நாளில் மட்டும் இத்தனை கோடிக்கு மது பாட்டில் விற்று தீர்ந்து உள்ளதா.?

image
image

கொரோனா வைரஸ் பாதிப்பினால் டாஸ்மார்க் கடைகள் சுமார் 44 நாட்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுபிரியர்கள் தனது வாழ்க்கையை தொலைத்து இருந்தது போல காணப்பட்டார் இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் அறிவிப்பின் பேரில் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டன.

இதனால் மது பிரியர்கள் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக முன்பு வெடி வெடித்து, கேக் கொடுத்து கொண்டாடி வந்தனர் அதுமட்டுமில்லாமல் கடையின் முன்பு சூடம் ஏற்றி வணங்கி வந்தனர் மது பிரியர்கள். நேற்று திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் இடைவெளியை பின்பற்றி காத்திருந்து வாங்கி சென்றனர், பெரும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாட்டிலேயும் மது விற்பனை 170கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலேயே மதுபானங்கள் அதிக விற்கப்பட்டு அந்த நிலையில் தற்போது அதை விட இரு மடங்கு அதிகமாக விற்று தீர்த்து உள்ளது. வழக்கமாக நாட்களில் 85 முதல் 90 கோடி ரூபாய் வரை விற்பனையாகும்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் குறைவான மதுக்கடைகளில் மது விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் அதிகமாக விற்ற பொழுதினும் மக்கள் அதிகமாக மதுபாட்டிலை வாங்கிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.