“யாத்திசை திரைப்படம்” சூப்பரா.? சுமாரா.? சமுத்திரக்கனி கொடுத்த விமர்சனம்

samuthirakani
samuthirakani

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருபவர் சமுத்திரக்கனி இவர் கடைசியாக அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்தும் வருகிறார்.

இதனால் சமுத்திரகனியின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி திரையுலகில் ஓடும் சமுத்திரக்கனி தன்னுடைய படங்களை தாண்டி மற்ற படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்த்து வருவது வழக்கம்..

படம் அவருக்கு பிடித்திருந்தால் அந்தப் படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படையாக சொல்லக்கூடியவரும் சமுத்திரக்கனி.. அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் வெளியான யாத்திசை திரைப்படத்தைப் பார்த்து கண்டு களித்தார் வெளியே வந்த அவர் இந்த திரைப்படம் குறித்து ஒரு பதிவையும் போட்டு உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சினிமா உலகில் எப்பொழுதுமே வரலாற்று கதைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது அதன்படி பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான பாண்டியர்களைப் பற்றி சொல்லக்கூடிய ஒரு படம் தான் யாத்திசை இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் பார்த்து கொண்டாடினர்.

அதன் போல சமுத்திரக்கனி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விமர்சனம் கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது யார்த்திசை திரைப்படம் ஆகசிறந்த முயற்சி.. தரமான வெற்றி.. பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியிருக்கிறார். இதோ அந்த ட்விட்டர் பதிவை நீங்களே பாருங்கள்.