விஜய் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த யாஷின் கேஜிஎப் 2.!

KGF-AND-BEAST-
KGF-AND-BEAST-

சமீபகாலமாக சினிமா உலகில் முதல் படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று விட்டால் உடனே அதன் அடுத்த பாகத்தை எடுக்க ஆசைப் படுவது வழக்கம் அந்த வகையில் கன்னடத்தில் கேஜிஎப் என்ற திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் எடுத்து இருந்தார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக யாஷ் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் பொருந்தியிருந்தால் கன்னடத்தையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி அசத்தியது. குறிப்பாக தமிழில் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.

பேசிய முதல் பாகம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை அடுத்த கணமே எடுக்க ஆரம்பித்தது ஏற்கனவே எடுத்திருந்தாலும் பல்வேறு தடைகளை சந்தித்துக் கொண்டே வந்ததால் கேஜிஎப் 2,திரைப்படம் பெரிய அளவில் ரிலீஸ் செய்யாமல் போனது தேதியை மாற்றிக் கொண்டே போனது ஒரு வழியாக தற்போது ஏப்ரல் 14 ல் ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளது.

கன்னட படமான கே ஜி எஃப்  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த படமாகப் பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாகிறது. இப்படி சிறந்த படங்கள் ஒரே நாளில் மோத இருக்கின்றன இந்த நிலையில் முதலாவதாக கேஜிஎப் திரைப்படம் ரசிகர்களை கொண்ட வைக்க முதலில் டிரைலர் ரிலீஸ் செய்கிறது.

தற்போது அறிவித்துள்ளது மார்ச் 27 ஆம் தேதி 6:40 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிரடியாக கூறி உள்ளது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் இன்னும் பீஸ்ட் படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை என கூறி கேட்டு வருகின்றனர்.