தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவருடைய நடிப்பில் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்கள் வெளிவந்தது மட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் உள்ளது அது மட்டுமில்லாமல் இவருக்கென ரசிகர் மன்றம் இல்லாவிட்டாலும் இவர் திரைப்படம் என்றால் தியேட்டரில் கூட்டம் அலை மோதும்.
இவ்வாறு பிரபலமான நமது அஜீத்தை அனைவரும் தல என செல்லமாக அழைப்பது வழக்கம் தான் அந்த வகையில் நமது ரசிகர்களுக்கு தல என்றால் அது அஜித் தான் அந்த வகையில் நமது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி யையும் தல என அழைப்பார்கள் ஆனால் அதை ஒருபோதும் அவர் ஏற்றுக்கொண்டது கிடையாது.
அந்தவகையில் ஒவ்வொரு முறையும் தோனியை தல என்று அழைக்கும் பொழுது அஜித் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்வதே கிடையாது இதனால் ஏதேனும் பிரபலங்கள் தோனியை தல என்று புகழ்ந்து விட்டால் போதும் அவரை சமூகவலைத்தள பக்கத்தில் நாறடித்து விடுவார்கள் அஜித்தின் ரசிகர்கள்.
இதன் காரணமாக தற்போது தல அஜித் தனக்கு தல என்ற பட்டம் வேண்டாம் என சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தது அஜித்தின் ரசிகர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டது. அந்த வகையில் அஜித் ஒரு அறிக்கையையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் என்னை பற்றி எழுதும் போதோ அல்லது பேசும் போது என்னுடைய இயற்பெயரான அஜித்குமார் அல்லது அஜித் அல்லது ak என்று குறிப்பிட்டு கூறினால் போதும் வேறு ஏதேனும் பட்டப் பெயரை வைத்து என்னை அழைக்க வேண்டாம் என்பது தன்னுடைய வேண்டுகோள் என்று கூறிஉள்ளார்.
இந்நிலையில் பிரபல பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் தல அஜித் என பதிவிட்டிருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் தல அஜித் எப்பொழுதும் தல தான் என கொண்டாடி வருகிறார்கள்.