விஜய் டிவி தொலைக்காட்சி அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் அதுவும் அந்த நிகழ்ச்சி எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றால் அதை சீசன் சீசனாக கையாளுவதை வழக்கமாக வைத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன்.
விஜய் டிவி யில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே செம வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த சீனையும் சிறப்பான முறையில் நடத்தி TRP யில் நல்லதொரு இடத்தைப் பிடித்தது. தற்போது ஐந்தாவது கட்ட சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தொடங்கி வைத்து சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்.
இந்த சீசனில் மொத்தம் 10 பெண்கள், 7 ஆண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டுள்ளனர் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக திருநங்கை நமிதா மாரிமுத்து வெளியேறி உள்ளார் அவரை தொடர்ந்து 17 போட்டியாளர்கள் களத்தில் இருந்த நிலையில் நேற்று நடந்த எபிசோடில் மலேசியா நாட்டைச் சார்ந்த நாதியா சாங் வெளியேறினார் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
தற்பொழுது தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு தற்போது மோத ரெடியாக இருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் வெடிக்கும் என பிக்பாஸ்சும், மக்களும் காத்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இனிப்பான மற்றும் கசப்பான சம்பவங்களை அவ்வப்போது பேசி வருகின்றனர் அந்த வகையில் நிரூப் தனது முன்னாள் காதலி நடிகை யாஷிகா குறித்து பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி அவரால் தான் தனக்கு பல வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். நிரூப்புக்கு யாஷிகா மட்டும் முன்னாள் காதலி கிடையாது. நடிகை அபிராமியும் என்பது தெரியவந்துள்ளது. ஆம் இருவரும் நெருக்கமாக இருந்து கொண்டு எடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Throwback – #Niroop with his Ex – Girlfriends Yashika & Abhirami #BiggBossTamil #BiggBossTamil5 pic.twitter.com/EKhYa5UiOj
— VCD (@VCDtweets) October 18, 2021