அஜித்தின் போட்டோவை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட யாஷிகா ஆனந்த் – போட்ட ட்வீட்டால் கழுவி ஊற்றும் AK ரசிகர்கள்.

yashika

தமிழ் சினிமாவில் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நீண்டநாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயணித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகினர். பின்பு சிறப்பான படங்களை தேர்வு செய்து பிஸியாக நடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது கார் விபத்துக்குள்ளானது அதில் இவரது தோழி உயிரிழந்த நிலையில் யாஷிகா படுகாயமடைந்து அண்மையில்தான் குணமாகி வீடு திரும்பினார்.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது பழையபடி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் பொய்யான ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்று ஓபன் செய்யப்பட்டுள்ளது அதில் அஜித் மற்றும் ஷாலினி இருவரின் பழைய புகைப்படத்துடன் முதன்முதலாக ட்விட்டருக்கு வருகை தந்து உள்ளேன் என பதிவிட்டுள்ளார். அந்தப் போலி அக்கவுண்டை வரவேற்கும் வகையில் யாஷிகா ஆனந்த் “வெல்கம் மேம்” என கமெண்ட் செய்துள்ளார்.

yashika anand
yashika anand

மேலும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஷாலினிக்கு டுவிட்டர் அக்கவுண்டில் எந்த கணக்கும் இல்லை. இந்த அக்கவுண்ட் போலியானது எனவும் தெரிவித்திருந்தார். இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் பலரும் போலி அக்கவுண்ட் என கூட தெரியாமல் ட்விட் செய்து வருகிறீர்கள் என யாஷிகாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.  மேலும் குடிபோதையில் இப்படி செய்கிறீர்களா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ajith mananger