தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஆரம்பத்தில் இருட்டுஅறையில்முரட்டுகுத்து மற்றும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களை சக மனிதர்களாக அரவணைத்துக் கொண்டதன் மூலம் பிக்பாஸில் பிரபலமடைந்தார்.
பிக்பாஸல் அவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகரிக்க தொடங்கின அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றத்தையும் சமூக வலைத்தளத்தில் தொடங்கியிருந்தனர். பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களும் சர்ச்சையான செயலிலும் ஈடுபடாத நபராக யாஷிகா ஆனந்த் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் தமிழ் திரையுலகில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. படத்தில் தனது கவர்ச்சியை காட்டினாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எனவே இதனை தொடர்ந்து ஆனந்த் அவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்பொழுது அவர் ராஜபீமா, அழுத்தம் எனப் பல திரைப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவர்கள் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். தற்போது யாஷிகா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் யாஷிகா எப்படி இருந்தாலும் சூப்பராக இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்