Yashika ananth : கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது, அதனால் எந்த ஒரு படபிடிப்பும் நடைபெறாமல் பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள், வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களுடைய பொழுதைக் கழிப்பதற்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு.
பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ ஜிம் ஒர்க் வீடியோ சமையல் செய்யும் வீடியோ போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது என பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் யாஷிகா.
அதன் பிறகு தன்னுடைய நல்ல குணங்களை வெளிப்படுத்துவதற்காக மக்களுக்குப் புரிய வைப்பதற்காகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்க பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அதன்பிறகு நடித்த ஜம்பி என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்தநிலையில் யாஷிகா அடுத்ததாக இவன் தான் உத்தமன், ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் யாஷிகா ரசிகர்களை கவர்வதற்காகவே அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த புகைப்படத்தில் யாஷிகா கருப்பு நிற புடவையில் தன்னுடைய வயிற்றில் பெல்ட் அணிந்துகொண்டு தன்னுடைய கட்டழகை கச்சிதமாக காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

இதொ அந்த புகைப்படங்கள்.


