யாஷிகா விரித்த வலையில் சிக்கிய பிரபல நடிகர்.! தொடங்கியது படப்பிடிப்பு கிசு கிசு இல்லாமல் மீண்டு வருவாரா.

yashika-ananth

எஸ் ஜே சூர்யா இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல வகையில் பணியாற்றி வருகிறார்.  இவர் இயக்குனராக இருந்தாலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு நிச்சயம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கிழக்கு சீமையிலே திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் 1999 ஆம் ஆண்டு அஜித்தின் வாலி திரைப்படத்தை இயக்கி, தான் ஒரு இயக்குனர் என்பதை நிலை நாட்டினார்.  அதன்பிறகு குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை என பல திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதேபோல் நியூ, அன்பே ஆருயிரே, மகாநடிகன், கள்வனின் காதலி, டிஷ்யூம், வியாபாரி, திருமகன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் எஸ் ஜே சூரியா புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.  அதனைத் தொடர்ந்து எஸ் எஸ் சூர்யா தற்போது மாநாடு, உயர்ந்த மனிதன், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் புதிதாக எஸ் ஜே சூர்யா கடமை செய் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் பிரபலமானாரோ இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் கடமை செய் திரைப்படத்தை முத்துனகத்திரிக்கா திரைப் படத்தின் இயக்குனரான வெங்கட்ராகவன் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரமேஷ் தயாரிக்க இருக்கிறார்.  படப்பிடிப்பு நேற்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் முத்தின கத்திரிக்கா இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா இருவரும் முதன்முறையாக இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

sj-suriya
sj-suriya