நீண்ட நாள் கனவை நீனைவாக்கிய “யாஷிகா ஆனந்த்” – சந்தோஷத்தில் அவர் வெளியிட்ட செய்தி.! வாழ்த்தும் ரசிகர் கூட்டம்.

yashika anandh
yashika anandh

மாடலிங் துறையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த யாஷிகா ஆனந்த் வெள்ளித்திரையில் ஆரம்பத்தில் கவர்ச்சியான ரோல்களில் நடித்து வந்ததன் விளைவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன அந்தவகையில் இவர் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் சற்று தனது வளைவு நெளிவான கவர்ச்சியை காட்டினார்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான சாயலிலேயே புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைப் குதுகலப்படுத்தி வருவார். அதனால் ரசிகர்கள் இவரை ஆரம்பத்திலேயே கவர்ச்சி நடிகை என முடிவு பண்ண ஆரம்பித்தனர். ஆனால் அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றி கொள்ள வெள்ளித்திரையில் இவர் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை காட்ட ஆரம்பித்தார்.

அந்த வகையில் யாஷிகா அனந்து கடமையை செய், சல்பர், இவன் தான் உத்தமன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி வெள்ளி திரையில் ஓடி கொண்டிருந்த இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போது மகாபலிபுரம் அருகே இவர் கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா மற்றும் இரு ஆண் நண்பர்கள் மிகப்பெரிய பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நெருங்கிய தோழியான வள்ளி செட்டி பவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.யாஷி காவுக்கு முதுகில் வலி ஏற்பட்டு ஆபரேஷன் செய்து பல மாதங்கள் கழித்து சமீபத்தில்தான் நடக்கவே ஆரம்பித்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் யாஷிகா தற்போது தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு புதிய வீட்டை வாங்கி உள்ளார்.

oshain yashika
oshain yashika

இது குறித்து அவர் பேசியது தனது நீண்டநாள் கனவு நிறைவேறி இருப்பதாக கூறி வீட்டின் கிரகப்பிரவேச வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது தங்கை ஓசன் ஆனந்த் இருக்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.