விபத்துக்குப் பிறகு இப்படி ஒரு பதிவை பகிர்ந்த யாஷிகா ஆனந்த்.! இப்படி இருக்கும் நிலைமையில் இது உங்களுக்கு தேவைதானா என கேட்கும் நெட்டிசன்கள்.

yashika
yashika

நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது யாஷிகா ஆனந்த் தான் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

வெள்ளித்திரைக்கு செல்வதற்கு முன்பே இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று பிக்பாஸ் பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கைப்பற்றி நடித்து வந்தார்.

மேலும் இவருக்கு சமீபத்தில் ஒரு கோர விபத்து நடந்து விட்டது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆக்சிடென்ட் ஆகி விட்டது இவருடன் வந்த இவர் தோழியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் இவரது உடம்பில் கால்,முதுகு என பல இடங்களில் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது தற்போது இவர் வீட்டில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்து வருகிறார்.

இவரது ஆக்சிடென்ட் குறித்து தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இவருக்கு என்ன ஆயிற்று என பலரும் துடித்துப் போய் பல கேள்விகளை கேட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் தற்பொழுது யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதில் இவர் நடித்துள்ள கடமையை செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.

அதனை பதிவிட்ட யாஷிகா ஆனந்த் அத்துடன் இந்த நிலையை அடைய நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார் இதனை வைத்துப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் என்ன கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை என இவரை கலாய்க்கும் விதமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.