தமிழ் சினிமாவில் 2016ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் பாடம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதன்பின்பு 2018ஆம் ஆண்டு சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதுமட்டுமில்லாமல் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவரை பிரபலம் ஆக்கினாலும் கவர்ச்சி நடிகை என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது அதனால் இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு பெருமளவிற்கு கிடைக்கவில்லை. எப்படியாவது தன்னுடைய கதாபாத்திரத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் அப்படிப்பட்ட நடிகை இல்லை என நிரூபித்தார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே அமைந்து வந்தன. மேலும் இவர் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் இவன்தான் உத்தமன், ராஜபீமா கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அந்த வகையில் ரசிகர்களை கவர்வதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
