தமிழ் ஹீரோகளுக்கு பயத்தை காட்ட வரும் “நடிகர் யாஷ்”.. மாஸ் கதையை சொன்ன தமிழ் இயக்குனர்

yaash
yaash

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்கள் பிறமொழிப் பக்கம் படையெடுக்கிறார்கள் அந்த வகையில் இயக்குனர் அட்லீ ஹாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வைத்து ஹிந்தியில்  ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் மறுபக்கம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தெலுங்கில் டாப் ஹீரோவாக வளம் வரும் நடிகர் ராம்சரணை..

வைத்து  RC 15 படத்தை எடுத்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்க இவர்களது வரிசையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார் அவர் வேறு யாரும் அல்ல ஹீரோ, இரும்புத்திரை, சர்தார் போன்ற ஹிட் படங்களை இயக்கி வெற்றிகண்ட..

இயக்குனர் பி எஸ் மித்ரன் தான் கன்னடா டாப் ஹீரோ  யாஷிடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதையை யாஷ்க்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதாக சொல்லப்படுகிறது வெகு விரைவிலேயே இந்தக் கூட்டணி இணையும்  கூறப்படுகின்றன. இந்த படம் அமையும் பட்சத்தில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட  இயக்குனர் பி. எஸ். மித்திரனுக்கு..

இது மிகப்பெரிய ஒரு பரிசாக இருக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக நடிகர் யாஷ் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பாக கேஜிஎப், கே ஜி எஃப் 2 போன்ற படங்கள் சொல்லலாம்.. இப்ப கூட ஒரு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து பி எஸ் மித்திரனுடன் யாஷ் இணை அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது பொறுத்திருந்து. இது நடக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் அவர் முதன்முறையாக கால் தடம்பதிப்பார்.  இந்தப் படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமா நடிகர்களுக்கு யாஷ் பயத்தை காட்ட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.