கே ஜி எஃப் 2 திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட யாஷ்.! என்ன பகிர்ந்துள்ளார் பார்த்தீர்களா.!

yash
yash

யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் கேஜிஎஃப் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானபொழுது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்துவிட்டது.நடிகர் யாஷ் நடிப்பை பார்த்து விட்டு பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு இவர் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார்.

மேலும் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.அதிலும் குறிப்பாக இந்த இரண்டாம் பாகத்தில் பல சினிமா பிரபலங்களை நடிக்க வைப்பதால்.

படம் பல கோடி வசூல் செய்து விடும் என பலரும் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் இவரது ரசிகர்கள் பலரும் இந்த இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள் ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் யாஷ் ஒரு பதிவை பகிர்ந்துள்ளாராம்.

அதில் இந்த இரண்டாம் பாகத்தின் தென்னிந்திய சாட்டிலைட் உரிமையை பிரபல ஜீ தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக நடிகர் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் இந்த திரைப்படம் வெளியானால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.