தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சூர்யா42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் பாதி முடிவடைந்து விட்டது மேலும் பாதி விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் அடுத்ததாக வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா அவர்கள் தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோவாவில் காட்ச்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறபடுகிறது.
3டி தொழில்நுட்ப கருவிகளை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது சூர்யா 42 திரைப்படம். இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் பெங்களூரில் ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அப்போது கேஜிஎப் பட நடிகர் யாஷ் அவர்கள் நடிகர் சூர்யாவை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரும் சந்தித்து ஆலோசனை பேசியுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியான உடனே ரசிகர்கள் ரோலக்ஸ் மற்றும் ராகி பாய் ஆகிய இருவரும் கூட்டணியில் ஒரு படம் நடிக்க உள்ளதாக ஒரு புரளியை கிளப்பி வருகின்றனர் ஆனால் யாஷ் அவர்கள் நடிகர் சூர்யாவை சந்திக்க போனதற்கு முக்கியமான காரணமே சூர்யா அவர்கள் சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க தான் யாஷ் அவர்கள் சூர்யாவை நேரில் சென்று பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் இவர்களுடைய புகைப்படத்தை பார்த்து இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர். இவர்கள் இப்படி ஒரு வதந்தியை பரப்ப காரணமே சூர்யா மற்றும் யாஷ் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.